About CIJ
The Centre for Independent Journalism is a non-profit organisation promoting media independence and freedom of expression in Malaysia.
Archive
சென்டர் ஃபோர் இண்டிபெண்டென் ஜர்னலிசம் (சி.ஐ.ஜெ.) 15-வது பொதுத் தேர்தலுக்கான வெறுப்பு-பேச்சு கண்காணிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. மலேசிய மக்கள் தேர்தலுக்கு தயாராகி வரும் இந்நிலையில் “வெறுக்கத்தக்க பேச்சுக்குஇல்லை என்று சொல்லுங்கள்” என்ற வலைத்தளத்தை பொது மக்களுக்காக தொடங்கி இருக்கிறது.
சி.ஐ.ஜெ.-உம் அதன் கூட்டணியும் வரும் பொது தேர்தலில் சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறானதகவல்களைப் பரப்பும் நிகழ்வுகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற வழிமுறை முந்தைய தேர்தலிலும் மேலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகாரத்தில் இருப்பவர்களை அச்சுறுத்தும் போதும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஷெரட்டன் நகர்வுக்குப் பிந்தைய காலகட்டத்திலும் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயின் காலகட்டத்திலும் நிகழ்ந்தவை இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இனம், மதம், அரசு, பாலினம், எல்.ஜி.பி.டி.ஐ.கியூ, அகதிகள் மற்றும் குடியேறிகள் போன்ற பிரச்சினைகளைச் சுற்றி பொது மக்களின் செல்வாக்கை பெற அரசியல்வாதிகளும் பிற முக்கிய நபர்களும் சொல்லாட்சிக் கலைகளை ஆயுதமாக ஏந்துகிறார்கள். ஜனநாயகமற்ற அரசியல் நாட்டங்களை வெல்வதற்கு அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.
வெறுப்பு பேச்சு சிக்கலானது. இது தீர்வுகாண கவனம் செலுத்தும் சிந்தனையிலிருந்து ஒருவரை திசை திருப்புகிறது. ஆபத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் திறனை மேலும் அதிகரிக்கிறது.
இந்த திட்டம் வெறுக்கத்தக்க பேச்சின் தீவிரத்தை கண்காணிப்பதையும் 15-ஆம் பொது தேர்தலின் முன்னும் பின்னும் வெறுப்பு அடிப்படையிலான பரப்புதலுக்குக் கூட்டு பதில்களை உருவாக்குவதையும், ஆன்லைனில் வெறுக்கத்தக்க பேச்சை குடிமக்கள் எதிர்கொள்ளும்போது திறம்பட பதிலளிக்க உதவுவதையும் நோக்கமாக கொண்டது.
இந்தத் திட்டம் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1 கண்காணிப்பு கூறு
கண்காணிப்பு கூறுகள் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (யு.எஸ்.எம்), மலேசிய சபா பல்கலைக்கழகம் (யு.எம்.எஸ்) மற்றும் மலேசிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அரசாங்க ஏஜென்சிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் முக்கிய தலைவர்களால் பரப்பப்படும் இனம், மதம், அரசு, பாலினம், எல்.ஜி.பி.டி.ஐ.கியூ, மற்றும் குடியேறிகலைச் சார்ந்த வெறுப்பு பேச்சுக்களின் தீவிரத்தை இந்த கண்காணிப்பு அளவிடும்.
பேச்சின் கடுமை பின்வரும் நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது:
நிலை 1 – கருத்து வேறுபாடுகள் அல்லது அவமதிப்பு அல்லாத மொழி
நிலை 2 – அவமதிப்பு அல்லது பாரபட்சமான மொழி
நிலை 3 – மனிதாபிமானமற்ற அல்லது விரோதமான மொழி
நிலை 4 – தூண்டுதலை ஏற்படுத்தும் அல்லது வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் மொழி
பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் மற்றும் டிக்டாக் ஆகிய நான்கு தளங்களில் 96 சமூக ஊடக கணக்குகளை நாங்கள் கண்காணிப்போம். அம்னோ, பி.கே.ஆர், முடா, டிஏபி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தற்போதைய காபந்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் போலீஸ் திராஜா மலேசியா (பி.டி.ஆர்.எம்) போன்ற முக்கிய கட்சிகள் மற்றும் நபர்களால் நடத்தப்படும் கணக்குகள் இதில் அடங்கும். சமூக ஊடகங்கள் மற்றும் பெரிதா ஹரியான், சின் சியூ டெய்லி, தி ஸ்டார், மலேசியாகினி, எச்.ஆர்.எச் ஜொகூர் பட்டத்து இளவரசர் மற்றும் மத செல்வாக்கு மிக்க நபர் ஃபிர்தவுஸ் வோங் போன்ற முக்கிய தலைவர்களுக்குச் சொந்தமான சமூக ஊடக கணக்குகளையும் நாங்கள் கண்காணிப்போம். கூடுதலாக, போட்கள் மற்றும் சைபர் ட்ருபேர்ஸ்கள் போன்ற கோர்டினேதட் இனோதென்டிக் பிஹேவியர் (சி.ஐ.பி) வகைகளையும் கண்காணிப்போம்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு, ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 30 வரை நாங்கள் நடத்திய பைலட் சமூக ஊடக கண்காணிப்பு திட்டத்திலிருந்து எங்கள் ஆரம்ப பகுப்பாய்வு பற்றி மேலும் அறிய, எங்கள் மைக்ரோசைட்டைப் பார்வையிடுங்கள்.
2 அதிவிரைவாக பதிலளிக்கும் கூறு
திட்டத்தின் அதிவிரைவாக பதிலளிக்கும் கூறு எங்கள் கண்காணிப்பு தரவுகளில் கட்டமைக்கப்பட்ட எச்சரிக்கை முறையை உள்ளடக்கியது. இது ஒரு குறிப்பிட்ட பேச்சுக்கு சரியான நேரத்தில் பதில் அல்லது செயல் தேவைப்படும்போது அடையாளம் காட்டுகிறது.
அதிவிரைவான பதிலளிப்பு முறை சி.ஐ.ஜெ. மற்றும் புசாட் கோமஸ், சிஸ்டேர்ஸ் இன் இஸ்லாம் (எஸ்.ஐ.எஸ்), ஆர்கிடெக்ஸ் ஆஃப் டைவர்சிட்டி (எ.ஓ.டி), பியோன் பார்டர்ஸ், அசிலம் எக்ஸெஸ் மலேசியா, சஹாபத் வனிதா, தெனகனிதா, நார்த் சவுத் இனிஷியேட்டிவ் (என்.எஸ்.ஐ) மற்றும் ஜஸ்டிஸ் ஃபோர் சிஸ்டர்ஸ் ஆகியவற்றுடனான கூட்டாண்மையை உள்ளடக்கியது. எங்கள் எச்சரிக்கை முறையைத் தூண்டும் வெறுக்கத்தக்க பேச்சை எதிர்கொள்ள எங்கள் கூட்டாளர்கள் விவரிப்புகளையும் உள்ளடக்கத்தையும் பங்களிப்பார்கள்.
தீவிரத்தன்மை மற்றும் ஆபத்து நிலைகளுக்கு ஏற்ப எங்கள் பதில்கள் மற்றும் செயல்கள் மாறுபடும். பதிலளிப்பின் முதல் கட்டத்தில், சி.ஐ.ஜெ மற்றும் கூட்டாளர்கள், பாதுகாப்பு எச்சரிக்கைகள், சான்று அடிப்படையிலான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எப். ஏ. கியூ), அறிக்கைகள், சமூக ஊடக வெளியீடுகள் மற்றும் சமூக ஊடக ஈடுபாடு போன்ற தகவல்தொடர்பு ஆதரவை வழங்குவார்கள். ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் சமூக ஊடக தளங்களின் அறிக்கையிடல் வழிமுறைகளை அணுக நாங்கள் உதவுவோம். சட்டப் பாதுகாப்பு நிதியம் (எல். டி. எப்) மற்றும் ஏனைய சேவைகள் ஊடாக ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கு மேலும் வளங்கள் கிடைக்கப்பெறும். தவறான தகவல்களை எதிர்கொள்ள சரிபார்ப்பு முயற்சிகளுக்கு விழிப்பூட்டல்களும் அனுப்பப்படும்.
“வெறுக்கதக்க பேச்சுக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்” மைக்ரோசைட் வெளியீடு
இந்த மைக்ரோசைட்டில் தினசரி கண்காணிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவை பொது விமர்சனம் மற்றும் பகுப்பாய்வுக்காக கிடைக்கும். இந்த போர்டல் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான வளங்களை வழங்கும். கூடுதலாக, மைக்ரோசைட் வழியாக எவரும் வெறுப்புப் பேச்சைப் புகாரளிக்கலாம்.
தவறான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை நிறுத்துவதில் தனிநபர்கள் ஒரு பாத்திரத்தை வகிப்பதைத் தவிர, அரசாங்கம், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. சிறந்த நடைமுறைகளுக்கான பரிந்துரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
கூடுதல் தகவலுக்கு, பின்வரும் நபரை அல்லது மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுங்கள்:
பெயர்: வாத்ஷ்லா நாயுடு
மின்னஞ்சல்: exec_director@cijmalaysia.net
The Centre for Independent Journalism is a non-profit organisation promoting media independence and freedom of expression in Malaysia.