16 நவம்பர் 2022
பத்திரிக்கை அறிக்கை: ‘கெதுவானன் மெலாயு‘ விவரிப்பு 15-ஆம் பொதுத் தேர்தலில் விரிவாக்கப்பட்டது
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் அரசியல் சொல்லாட்சிகளில் இனம் சார்ந்த கதைகள்ஆதிக்கம் செலுத்துகின்றன என்று சென்டர் ஃபோர் இண்டிபெண்டென் ஜர்னலிசம் (சி.ஐ.ஜெ.)- இன் சமூக ஊடககண்காணிப்பு முயற்சி கண்டறிந்துள்ளது.
இந்த இடைக்கால கண்டுபிடிப்புகள், 20 அக்டோபர் முதல் 15 நவம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில், பிளவுபடுத்தும், இனவெறி, சகிப்புத்தன்மையற்ற மற்றும் வெறுப்பு அடிப்படையிலான கதைகளின் முக்கியமிகைப்புகளில் ‘பாஸ்’ தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒருவர் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
கூடுதலாக, சிக் ‘பாஸ்’ இளைஞர் தலைவர், பிற ‘பாஸ்’ அரசியல்வாதிகள் மற்றும் பிரபல ஆதரிப்பாளர்களான ஜமால்அப்தில்லா மற்றும் சுல் ஹுசைமி போன்றவர்களும் எரிச்சலூட்டும் கதைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ‘பி.எச். மற்றும்பி.என்-னுக்கு வாக்களித்தால் நரகத்திற்குச் செல்வீர்கள்’, ‘காஃபிர் ஹர்பி’க்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல், சீனர்கள் (டி.ஏ.பி) மற்றும் இந்தியர்களுக்கு எதிராக மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றுமுஸ்லீம் வாக்காளர்களைப் பயமுறுத்துகின்றனர்.
ஹாடி அவாங் மற்றும் ‘பாஸ்’ ஆகியவையும் சமீபத்திய வாரங்களில் டி.ஏ.பி கட்சிக்காரர்கள் நாத்திகர்கள் எனவும்எல்.ஜி.பி.தி.ஐ.கியூ நடைமுறைகளை ஊக்குவிப்பதாகவும் கூறப்படுவதால் கம்யூனிஸ்ட் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி ‘ரெட்-டேக்கிங்’ 1 கை நாடியுள்ளனர்.
சி.ஐ.ஜெ.-இன் சமூக ஊடக கண்காணிப்பு முயற்சி, தேர்தலின் போது சமூக ஊடக கண்காணிப்பில் முதன்மையானஇது,
தேர்தல் காலத்தில் வெறுப்பூட்டும் பேச்சின் தீவிரத்தை கண்காணித்து வருகிறது. இந்த முயற்சியானது நாட்டிங்ஹாம்மலேசியா பல்கலைக்கழகம் (யு.என்.எம்), மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (யு.எஸ்.எம்) மற்றும் மலேசிய சபாபல்கலைக்கழகம் (யு.எம்.எஸ்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
1ஒரு கம்யூனிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் மீது பரிவிரக்கம் கொண்டு ஒரு தனிநபரை அல்லது நிறுவனத்தை துன்புறுத்துதல் அல்லது தாக்குதல் போன்றசெயலை செய்தல் ரெட் டேக்கிங் அல்லது ரெட் பெய்டிங் ஆகும்.
யு.எஸ்.எம் தகவல்தொடர்பு நிபுணர் டாக்டர் மஹ்யுதீன் அஹ்மத், ‘கெதுவானன் மெலாயு’ (மலாய் மேலாதிக்கம்) கதைசீன எதிர்ப்பு சொல்லாட்சிகளுடன் கைகோர்த்துச் செல்கிறது என்று குறிப்பிட்டார். “சீனர்களுக்கு எதிராக பயம்மற்றும் விரோதத்தை உருவாக்க இனம் மற்றும் மத அடிப்படையிலான வெறுப்பு பேச்சு ஆயுதமாக்கப்பட்டுள்ளது, இதனால் மலாய்-முஸ்லிம் வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக வாக்களிக்க தங்கள் மலாய் மற்றும்மத உரிமைகள் அழிக்கப்படக்கூடாது மற்றும் பாதிக்கப்படக்கூடாது. நமது ஜனநாயகத்தில் உள்ளடக்கியஅரசியலுக்கான இடத்தை இது தொடர்ந்து குறைக்கிறது,” என்றார்.
மத சம்மந்தபட்ட இலக்குகளை பயன்படுத்துவதில் பாஸ் கட்சி மட்டும் ஒதுக்கு அல்ல. கெராக்கான் தானா ஆயர்(ஜி.தி.ஏ) மலேசியாவில் உள்ள மலாய்க்காரர்களின் தலைவிதி ஜி.தி.ஏ உடன் தங்கியுள்ளது என்றும் அவர்கள் ஜி.தி.ஏ-க்கு வாக்களித்தால் மட்டுமே திடநிலையையும் செழுமையையும் அனுபவிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதே அளவு தீவிரம் இல்லாவிட்டாலும், பெரிகாத்தான் நேசனலுக்கு (பி.என்) வாக்களிப்பது தலிபான்கள் நாட்டைஆள்வது போல் இருக்கும் என்று கூறி பக்காத்தான் ஹராப்பானும் மதத்தை இலக்காக பயன்படுத்திவிளையாடியுள்ளது.
20 அக்டோபர் 2022 முதல் நவம்பர் 15 வரையிலான இடைக்காலத்தின் போது, மொத்தம் 52,012 தனிப்பட்டஇடுகைகள் கண்காணிப்பாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டன. கண்காணிக்கப்படும் கணக்குகள், பயனர்உருவாக்கிய கருத்துகள் மற்றும் குறிப்பிட்ட நடிகர்களைக் குறிப்பிடும் இடுகைகள் ஆகியவை இதில் அடங்கும்.
32,066 இடுகைகளுடன் இனம் சார்ந்த கதைகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து மதம்13,338 பதிவையும்; எல்.ஜி.பி.தி.ஐ.கியூ சமூகத்தை இலக்காகக் கொண்ட பாலின கருத்துகள் 5,161; ராயல்டி 3,968; குடியேறிகள் மற்றும் அகதிகளை குறிவைக்கும் கருத்துக்கள் மிகக் குறைவாக 2,2462 பதிவுகளாகவும் இருக்கின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கண்காணிக்கப்படும் நான்கு முக்கிய தளங்களில் இது பரவலாக இருந்தது, அதாவது பேஸ்புக்-இல் 31,969 இடுகைகள்; ட்விட்டர்-இல் 18,165 இடுகைகள்; டிக்டாக்-இல் 1,803 இடுகைகள்; மற்றும் யூடியூப்-இல் 75 இடுகைகளாக பதிவாகியுள்ளன.
2ஒரு தனித்துவமான இடுகைக்கு தரவு பிரத்தியேகமாக இல்லை. எனவே, தீவிரத்தன்மையின் மொத்த சிக்கல்கள் தனித்துவமான இடுகைகளின்மதிப்பிலிருந்து மாறுபடலாம்.
இனம் மற்றும் மதம் தொடர்பான 45404 இடுகைகளில், 7763 இனவெறி மற்றும் மத அவதூறுகள் மற்றும் கொச்சையான இடுகைகளை உள்ளடக்கியது; 26 விரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற மொழி அடங்கும்; மற்றும் 4 முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிரான நேரடியான தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும் பதிவுகள் அடங்கும்.
பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையில் ஆணாதிக்க மற்றும் பெண் வெறுப்பு நிலைப்பாடுகள் நிலவுகின்றன
இனம் மற்றும் மதத்தைத் தவிர, வெறுக்கத்தக்க பேச்சைச் சுற்றியுள்ள மற்ற முக்கிய போக்குகள் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினத்தைச் சுற்றியுள்ள எதிர்மறையான ஸ்டீரியோடைப்கள் என்று கண்காணிப்பு முயற்சி அதன் இடைக்கால கண்டுபிடிப்புகளில் கண்டறிந்துள்ளது.
லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் சேர்க்கை, திருநங்கை, இன்டர்செக்ஸ் மற்றும் க்யூர் (எல்.ஜி.பி.தி.ஐ.கியூ) சமூகத்திற்கு எதிராக வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதற்கு பொது ஒழுக்கம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் தவறான கருத்துக்கள் மற்றும் வாதங்கள் ஆயுதமாக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 29 அன்று கோலாலம்பூரில் ஒரு தனியார் டிராக் குயின் ஹாலோவீன் விருந்தில் காவல்துறை மற்றும் மத்திய பிரதேச இஸ்லாமிய மதத் துறை (ஜாவி) நடத்திய சோதனையைத் தொடர்ந்து, எல்.ஜி.பி.தி.ஐ.கியூ சமூகத்தின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் டிக்டாக் என பல்வேறு தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டன. நுமான் அஃபிஃபி இந்த நிலைமை குறித்த புதுப்பிப்புகளை வழங்கிய நிலையில் ஆன்லைனில் ஒரு இலக்காக மாறினார். ரெய்டு மற்றும் தொடர்புடைய கைதுகளுக்கு அதிகாரிகளை வாழ்த்துவது முதல், எல்.ஜி.பி.தி.ஐ.கியூ சமூகத்தை நமது சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் இவர்கள் வைரஸ் நோயைப் பரப்புபவர்கள் என்றும் கருத்துக்கள் பரவின. ஒரு பழமைவாதக் கருத்துத் தலைவரான ரஃபிதா ஹனிம் மொக்தார், அதிகாரிகளின் செயலுக்கு நன்றி தெரிவித்துள்ள பதிவு, மேலும் வெறுப்பூட்டும் கருத்துக்களைத் தூண்டியது.
பக்காத்தான் ஹராப்பான் ‘தாராளவாத’ முத்திரை குத்தப்பட்டு ‘எல்.ஜி.பி.தி.ஐ.கியூ’ நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. ‘பாஸ்’ அரசியல்வாதியான சிட்டி சாயலாஹ் , ‘கெராக்கான் பென்குண்டி செடார்’ –இன் எல்.ஜி.பி.தி.ஐ.கியூ-க்கு எதிரான வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளார், இது சமூகத்திற்கு எதிராக மேலும் வெறுப்பூட்டும் கதைகளைத் தூண்டியது.
அஸ்மின் அலி மற்றும் ஹாசிக் அப்துல்லா அப்துல் அஜிஸ் ஆகியோருக்கு இடையேயான பாலியல் சந்திப்பின் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம் மீண்டும் வெளிவருவது மற்றொரு தொடர்ச்சியான போக்காக உள்ளது. இது அஸ்மினுக்கு எதிராக எல்.ஜி.பி.தி.ஐ.கியூ-க்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதற்கும் பரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
பாலினம் மற்றும் எல்.ஜி.பி.தி.ஐ.கியூ சமூகத்தை நோக்கமாகக் கொண்ட 5161 இடுகைகளில், 2533 இடுகைகள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான இழிவான சொற்கள், அவதூறுகள் மற்றும் இழிவானவை, மேலும் 8 பகைமை மற்றும் மனிதாபிமானமற்ற நிலையை எட்டியுள்ளன.
ஆச்சரியமில்லாத வகையில், பெண்களைப் பற்றி பல பாலியல் கருத்துகளும் இருந்தன. இந்த தேர்தல் சுழற்சியில் பாலினம் தொடர்பான பொதுவான கருப்பொருள் பெண் வேட்பாளர்களின் வேரூன்றிய பாலியல், புறநிலைப்படுத்தல் மற்றும் பாலினமயமாக்கல் ஆகும். இது அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது.
கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி எம்டி நோர், ஒரு பாலியல் டிக்டாக் வீடியோவில், சிக்-இல் உள்ள பெண் வேட்பாளர்கள் திறமையானவர்கள் அல்லது வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் அல்ல என்று கூறி அவர்களைக் குறைத்து குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். சனுசியின் கருத்துக்களை அஸ்மின் ஆதரித்ததாக ஊடகங்கள் தெரிவித்ததையடுத்து இந்த நிலைமை மோசமாகியது.
பாலியல் அவதூறுகள், இழிவான சொற்கள் மற்றும் கொச்சையான வார்த்தைகள் கொண்ட இடுகைகள் பெரும்பாலும் பெண் வேட்பாளர்களை இலக்காகக் கொண்டவை. ‘பெட்டினா’ என்ற வார்த்தையின் பயன்பாடு பெரும்பாலும் டி.ஏ.பி. மற்றும் குறிப்பாக ஹன்னா யோவை இலக்காகக் கொண்டது.
அதே நேரத்தில், ‘பத்து’ சுயேச்சை வேட்பாளர் நூர் ஃபத்தியா சியாஸ்வானா ஷஹாருதின் (‘கிளியோபாட்ரா’ என்று அழைக்கப்படுகிறார்) ஹிஜாப் மூலம் தனது ‘அரத்தை’ மறைக்காததற்காக தண்டிக்கப்பட்டார்.
நாட்டிங்ஹாம் மலேசியா பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர் பேராசிரியர் ஜஹாரோம் நைன் கருத்துப்படி, “அரசியலில் பெண்களின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடைமுறையில் உள்ள பாலின மற்றும் பாலின அடிப்படையிலான வெறுப்பு விவரிப்புகள் பெண்கள் அரசியல் பங்கேற்பதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் குறைக்கின்றன.” உடல் கவர்ச்சியில் கவனம் செலுத்துவது, மற்ற திறன்கள், நிபுணத்துவம் அல்லது செயல்களில் இருந்து கவனத்தை ஈர்க்கிறது. மேலும் வாக்காளர்கள் பெண் வேட்பாளர்களை குறைத்து மதிப்பிட அல்லது பொது அலுவலகத்திற்கு தகுதியானவர்கள் அல்ல எனும் கருத்தை தூண்டும்.
குடியேறிகள் மற்றும் அகதிகள் சமூகங்களுக்கு எதிரான இனவெறி மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இணையத்தில் இவர்களை பற்றிய தப்பான கருத்து வெளியீடல்
தேர்தலுக்கு முன்னதாக குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டனர். பெரும்பாலான பதிவுகள் இந்த சமூகங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் மலேசியர்களின் வேலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி வெறுப்பை விதைக்கின்றன.
இந்த சமூகங்களின் எதிர்மறையான சித்தரிப்புகள் பல ஆண்டுகளாக சீராக உள்ளன. அவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் இத்தகைய உரையாடல்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் மீதான வெறுப்புப் பேச்சுக்கு வழிவகுக்கின்றன, இதில் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இணையத்தில் இவர்களை பற்றிய தப்பான கருத்து வெளியீடல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் போன்றவை அடங்கும்.
எடுத்துக்காட்டாக, மலேசிய குடிவரவுத் துரையின் இடுகையில், ஆவணமற்ற குடியேறி தொழிலாளர்களைப் புகாரளிக்க தங்கள் ஹாட்லைனைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை ஊக்குவிக்கிறது, இதன் விளைவாக வெறுப்பூட்டும் கருத்துக்கள் அதிகம் பரவிவருகின்றன. சமூக ஊடகங்களில் குடியேறி தொழிலாளர்களின் முகவரிகள் மற்றும் தொடர்பு விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இணையத்தில் இவர்களை பற்றிய தப்பான கருத்து வெளியீடல்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கவையே.
மேரு மார்க்கெட்டில் குடியேறி தொழிலாளர்கள் பற்றி கணபதிராவ் பேசும்போது, ஒரு நேர்காணலில் அந்நிய வெறுப்பு மற்றும் குடியேறிகள் எதிர்ப்பு உணர்வும் வெளிப்பட்டது.
“குடியேறிகள் மற்றும் அகதிகளின் இருப்பைப் பயன்படுத்தி, வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, வெறுக்கத்தக்க பேச்சுக்கு வழிவகுக்கும் இனவெறியை தூண்டிவிடுவது, வன்முறை, கைது, தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தப்படுதல் அல்லது திரும்பப் பெறுதல் ஆகியவற்றின் அபாயத்தில் சமூகத்தை வைக்கும்.”, என டாக்டர் லீ குவோக் டியுங், யுஎம்எஸ் அரசியல் விஞ்ஞானி கூறினார்.
ஒட்டுமொத்தமாக கண்காணிக்கப்பட்ட இடுகைகளில் ஒப்பிடுகையில், 2246 மட்டுமே குடியேறிகள் மற்றும் அகதிகள் சமூகங்களை குறிவைத்துள்ள போதிலும், இந்த வகையில் விரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற பதவிகளின் தீவிரத்தன்மையை அடையும் அளவில் 43l இடுகைகளைக் கொண்டுள்ளது, மேலும் 4-இல் தூண்டுதல் மற்றும் வன்முறைக்கான அழைப்பு தென்பட்டது.
சி.ஐ.ஜெ- இன் நிர்வாக இயக்குனர் வத்ஷ்லா நாயுடு, “நவம்பர் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களுக்கு முன்பு, அனைத்து அரசியல் நடிகர்களும் வன்முறை மற்றும் தீவிரவாத வெறுப்பு கதைகளுக்கு எதிராக பாதுகாப்பது மிகவும் முக்கியமானது, அவை வாக்காளர் முடிவுகளை பாதிக்கலாம். பொதுமக்களாகிய நாம், நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள வலையில் வீழ்வதைத் தவிர்க்க வேண்டும், அதேபோன்ற வெறுப்பு உணர்வுகளைப் பரப்புவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படக்கூடாது” என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெறுப்பூட்டும் பேச்சைக் கண்காணிப்பதைத் தவிர, 15 ஆம் பொது தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெறுப்பு அடிப்படையிலான கதைகளுக்கு கூட்டு எதிர் பதிலை வழங்குவதையும் சி.ஐ.ஜெ-இன் முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இம்முயற்சியின் மூலன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் வாக்காளர்கள் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு மிகவும் திறம்பட பதிலளிப்பதற்காக ஆதார வழிகாட்டிகளையும் உருவாக்கியுள்ளது.
கண்காணிப்பு முயற்சி 22 நவம்பர் 2022 வரை தொடர்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 20 அக்டோபர் – 20 நவம்பர் 2022 வரையிலான முழுமையான கண்காணிப்பின் இறுதி அறிக்கையை சி.ஐ.ஜெ வெளியிடும்.
கண்காணிப்பு மற்றும் விரைவான பதிலின் புதுப்பிப்புகளை சி.ஐ.ஜெ -இன் #SAYNOTOHATESPECH இணையதளத்தில் காணலாம். இந்த இணைப்பைப் பயன்படுத்தி வெறுக்கத்தக்க பேச்சைப் புகாரளிக்கவும்.
ஊடக தொடர்புக்கு:
வத்ஷ்லா நாயுடு [exec_director@cijmalaysia.net]
சென்டர் ஃபோர் இண்டிபெண்டென் ஜர்னலிசம்
The Centre for Independent Journalism is a non-profit organisation promoting media independence and freedom of expression in Malaysia.